ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறை​யாக இறு​திப் போட்டிக்கு முன்​னேறி ஜம்மு & காஷ்மீர் சாதனை!

0
13

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான பெங்​கால் – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் மேற்கு வங்​கத்​தில் உள்ள கல்​யாணி பகு​தி​யில் உள்ள பெங்​கால் கிரிக்​கட் அகாடமி மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பெங்​கால் அணி 328 ரன்​களும் ஜம்மு & காஷ்மீர் அணி 302 ரன்​களும் எடுத்​தன.

26 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய பெங்​கால் அணி 25.1 ஓவர்​களில் 99 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷாபாஷ் அகமது 24, சுராஜ் சிந்து ஜெஸ்​வால் 14, அனுஸ்​டுப் மஜும்​தார் 12, முகமது ஷமி 11 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற பேட்​ஸ்​மேன்​கள் ஒற்றை இலக்க ரன்​னில் வெளி​யேறினர்.

ஜம்மு & காஷ்மீர் அணி தரப்​பில் அகிப் நபி, சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர். யுத்​விர் சிங் 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 126 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 43 ரன்​கள் எடுத்​திருந்​தது. நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 34.4 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 126 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

வன்​ஷாஜ் சர்மா 83 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்டரிகளு​டன் 43 ரன்​களும், அப்​துல் சமத் 27 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 30 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஷுபம் பந்​திர் 27, கேப்​டன் பராஸ் டோக்ரா 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் அணி முதன் முறை​யாக இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி சாதனை படைத்​தது. ரஞ்​சிக் கோப்பை வரலாற்றில் ஜம்மு & காஷ்மீர் அணி அறி​முக​மாகி 67 ஆண்டு​களில் முதல்​முறையாக தற்​போது​தான் இறு​திப் போட்​டிக்​குத்​ தகுதிபெற்றுள்ளது.

கர்​நாடகா 802 ரன் முன்​னிலை

மற்​றொரு அரை இறு​தி​யில் கர்​நாடகா – உத்​தராகண்ட் அணி​கள் லக்​னோ​வில் விளை​யாடி வரு​கின்​றன. இதன் முதல் இன்​னிங்ஸில் கர்​நாடகா 736 ரன்​கள் குவித்​தது. தேவ்தத் படிக்​கல் 232, கே.எல்​.​ராகுல் 141, ரவிச்​சந்​திரன் சமரன் 135 ரன்​கள் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய உத்​தராகண்ட் நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 233 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. 503 ரன்​கள் முன்னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளையாடிய கர்​நாடக அணி ஆட்ட நேர முடி​வில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 299 ரன்​கள் குவித்​தது. அந்த அணி 802 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டம் நடை​பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here