இலங்கை பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – பேசியது என்ன?

0
12

”டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யில் மறுகட்டமைக்கு இந்​தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்​தித்த வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் உறுதி அளித்​தார்.

டிட்வா புய​லால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்​துள்​ளது. ஏராளமான சாலைகள், பாலங்​கள், வீடு​கள் சேதம் அடைந்துள்ளன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே இந்​தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்​டது.

தற்​போது இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் 2 நாள் அரசு முறை பயண​மாக இலங்கை வந்​துள்​ளார். பிரதமர் ஹரிணி அமரசூய்வாவை கொழும்​பு​வில் நேற்று ஜெய்​சங்​கர் சந்​தித்து பேசி​னார். அப்​போது, டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்​டுள்ள இலங்கை​யில் மறுகட்​டமைப்​புக்கு பிரதமர் மோடி​யின் உத்தரவின்​படி உதவு​வோம் என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் ஜெய்​சங்​கர் வெளி​யிட்ட பதி​வில், ”இலங்கை பிரதமர் ஹரிணியை சந்​தித்​தது மகிழ்ச்​சி​யாக உள்ளது. இலங்​கை​யில் மறுகட்​டமைப்​புக்​கான திட்​டத்தை இந்தியா வழங்கி உள்​ளது. இது இரு நாடு​களுக்கு இடை​யில் உள்ள ஆழ்ந்த நட்​புறவை பிர​திபலிக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்​தச் சந்​திப்​பின் போது இலங்கை வெளி​யுறவுத் துறை அமைச்சர் ஹெராத்​தும் உடன் இருந்​தார். பின்​னர் இரு​வரும் வடக்கு மாகாணத்​தின் கிளிநொச்​சி​யில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்த பகு​தி​யில் 120 அடி நீள பெய்லி பாலத்தை திறந்து வைத்​தனர்.

இந்​தப் பாலம் இந்​தியா சார்​பில் கட்​டித்​தரப்​பட்​டுள்​ளது. முன்னதாக இலங்கை அதிபர் அனுரா குமாரா திச​நாயகேவை​யும் அமைச்​சர் ஜெய்​சங்​கர் சந்​தித்​து, பிரதமர் மோடி​யின் வாழ்த்துகளை தெரி​வித்​தார். இலங்​கை​யில் இந்​தியா சார்​பில் 450 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள மறுகட்​டமைப்பு பணி​கள் மேற்கொள்​ளப்பட உள்​ளன. அவற்​றில் சாலைகள், ரயில் பாதைகள், பாலங்​கள், வீடு​கள் போன்ற மறுகட்​டமைப்​பு​கள் செய்யப்பட உள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here