‘குடும்பத்தினர் முன்னிலையில் டெல்லியில் விளையாடுவது சிறப்பு’ – ஆர்​யன் தத்

0
49

டெல்லி​யில் குடும்​பத்​தினர் முன்னிலை​யில் விளை​யாடு​வது சிறப்​பான விஷ​யம் என்று நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்திய வம்​சாவளி வீரர் ஆர்​யன் தத் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர் ஆர்​யன் தத். இவர் தற்​போது நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்று விளை​யாடி வரு​கிறார். வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி தொடங்​க​வுள்​ளது. போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நெதர்​லாந்து அணி​யினருடன் ஆர்​யன் தத்தும் வந்​துள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

கடந்த 2023-ம் நடை​பெற்ற உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின்​போது இந்​தியா வந்​திருந்​தேன். அதன் பிறகு இந்​தியா வரு​வதற்கு வாய்ப்​புக் கிடைக்​க​வில்​லை. தற்​போது மீண்​டும் ஒரு உலகக் கோப்பை போட்​டிக்​காக இந்தியா வந்​துள்​ளேன். 19-ம் தேதி இந்​தி​யா​வுக்கு எதி​ராக அகம​தா​பாத் மைதானத்​தில் மோத இருப்​பது உற்​சாகம் மிக்​க​தாய் உள்​ளது.

இந்த உலகக் கோப்​பைப் போட்​டி​யில் விளை​யாடு​வது எனக்கு சிறப்​பான விஷ​யம். டெல்​லி​யில் எனது உறவினர்கள் இருக்​கின்​றனர். எனது குடும்​பத்​தா​ரும் இங்கு வந்​துள்​ளனர். எனவே, டெல்லி போட்​டி​யில் எனது குடும்​பத்​தினர் முன்பு விளை​யாடு​வது சிறப்​பான விஷயம். எனது ஆட்​டத்தை எனது குடும்​பத்​தார் பார்ப்பார்கள். நேரம் கிடைத்​தால் அவர்​களை மைதானத்தில் சந்​தித்​துப் பேசுவேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here