ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம்: சொல்கிறார் புதிய கேப்டன் ஷுப்மன் கில்

0
131

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதற்​காக இந்​திய அணி இன்று இங்​கிலாந்து புறப்​பட்​டுச் செல்​கிறது. இதையொட்டி மும்​பை​யில் நேற்று கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரும் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது ஷுப்​மன் கில் கூறிய​தாவது:

நான் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​ட​போது மிக​வும் மகிழ்ச்​சி​யடைந்​தேன். பேட்​டிங் வரிசையை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. எங்​கள் திட்​டங்​களை வகுக்க 10 நாட்​கள் உள்​ளன. இங்​கிலாந்​தில் 10 நாட்​கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்​கிறோம். இதனுடன் நடை​பெறும் பயிற்சி ஆட்​டத்​துக்கு பின்​னரே டெஸ்ட் போட்​டிக்​கான பேட்​டிங் வரிசையை முடிவு செய்​வோம்.

ஒரு தலை​வ​ராக நான், முன்​மா​திரி​யாக செயல்​பட்டு அணியை வழிநடத்த விரும்​பு​கிறேன், நான் விளை​யாடும் எந்​த போட்​டி​யிலும் ஒரு பேட்​ஸ்​மே​னாகவே விளை​யாட விரும்​பு​கிறேன். சராசரி மற்​றும் ரன்​கள் எண்ணிக்​கையை நான் பார்ப்​பது கிடை​யாது. ஆனால் எனது செயல்​திற​னால் அணியை வழிநடத்த விரும்​பு​கிறேன்.

கேப்​டன்​ஷிப்​பில் எனக்​கென குறிப்​பிட்ட பாணி எது​வும் இல்​லை. நேரம் மற்​றும் அனுபவத்​துடன், எனது தனிப்​பட்ட பாணி வெளிப்படும். வீரர்​களின் பலம் மற்​றும் பலவீனங்​களை அறிந்து அவர்​களுக்கு உதவி செய்ய விரும்​பு​கிறேன். வீரர்​கள் அணி​யில் தங்​கள் இடம் குறித்து பாது​காப்​பாக உணரு​வதை உறுதி செய்​வது கேப்​டன் பணி​களில் முக்​கிய​மான ஒன்​று.

ஒவ்​வொரு சுற்​றுப்​பயணத்​தி​லும் தொடரை வெல்ல அழுத்​தம் இருக்​கும். இந்​தி​யா​வுக்​காக பல போட்​டிகளில் வெற்றி பெற்ற இரண்டு வீரர்​களின் (ரோஹித் சர்​மா, விராட் கோலி) இடத்தை நிரப்​புவது நிச்​சய​மாக கடின​மாக இருக்​கும். இது வேறு​பட்​ட​தாக இருக்​கும் என்று நான் நினைக்​க​வில்​லை. எங்​களிடம் அனுபவ​மும் திறமை​யும் சிறந்த கலவை​யில் உள்​ளது.

இங்​கிலாந்து அணி ஒரு குறிப்​பிட்ட வழி​யில் (பாஸ்​பால்) விளை​யாடு​கிறார்​கள். இந்​தி​யா​வில் நாங்​கள் அதை கண்​டோம். நாங்​கள் எங்​கள் செயல்​திறனில் முன்​முயற்​சி​யுடன் இருந்​தால் அது எங்​களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்​கும். இவ்​வாறு ஷுப்​மன் கில் கூறி​னார்.

‘பும்ரா விஷ​யத்​தில் முடிவு எடுக்​க​வில்​லை’: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறும்​போது, “ஆட்​டத்​தின் முடிவு எது​வாக இருந்​தா​லும் நான் எப்​போதும் அழுத்​தத்​திலேயே இருக்​கிறேன். நியூஸிலாந்து மற்​றும் ஆஸ்​திரேலியா தொடர்​களுக்​கு பிறகு நான் அழுத்​தத்​தில் இருந்​தேன், சாம்​பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் அதே அழுத்​தத்தை உணர்ந்​தேன். கவுன்டி கிரிக்​கெட்​டில் விளை​யாடிய வீரர்​கள் இருப்​பது எப்​போதும் சிறந்​தது. கருண் நாயர் இந்​தி​யா-ஏ அணிக்​காக இரட்டை சதம் அடித்​துள்​ளார். ஒன்​றிரண்டு போட்​டிகளை வைத்து நாங்​கள் அவரை மதிப்​பிட மாட்​டோம்.

அணிக்கு நல்​லது செய்ய மற்​றொரு வாய்ப்பு வீரர்​களுக்கு கிடைத்​துள்​ளது. நாங்​கள் நல்ல இடத்​தில் இருக்​கிறோம், முக்​கிய​மான சுற்​றுப்​பயணத்துக்கு எங்​களிடம் தரமான வீரர்​கள் உள்​ளனர். இங்​கிலாந்து டெஸ்ட் தொடரில் நிலைமையை கருத்​தில் கொண்டு வெற்​றியை தேடித்தரக்​கூடிய சிறந்த 11 வீரர்​களை தேர்வு செய்​வோம். ஜஸ்​பிரித் பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடு​வார் என்​பது குறித்து நாங்​கள் இன்​னும் முடி​வெடுக்​க​வில்​லை” என்​றார்.

‘ரோடுஷோவை ​விட மக்​கள் உயிர் முக்​கி​யம்’: பெங்​களூரு​வில் ஐபிஎல் வெற்றி கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​கள் குறித்து இந்​திய அணி​யின் பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறும்​போது, “ரோடுஷோக்​களை நடத்​து​வ​தில் எனக்கு ஒரு​போதும் ஆர்​வம் இல்​லை. நான் ஒரு வீர​ராக இருந்​த​போதும் அது பிடிக்​க​வில்​லை, இப்​போது ஒரு பயிற்​சி​யாள​ராக​வும் அதை விரும்​ப​வில்​லை. மக்​களின் உயிர்​கள் அதை​விட முக்​கி​யம். பெங்​களூரு​வில் நடந்​தது துயர​மானது, எதிர்​காலத்​தில் இது​போன்று எது​வும் நடக்​காது என்று நம்​பு​கிறேன். நாம் பொறுப்​புள்ள குடிமக்​களாக இருக்க வேண்​டும். நாம் ஒரு ரோடு ஷோவை நடத்​தத்​ தயா​ராக இல்​லை என்​றால்​, அதைச்​ செய்​திருக்​கக்​ கூ​டாது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here