அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

0
59

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கூறி​னார்.

சிதம்​பரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்பு மாபெரும் புரட்சி என்​றும், ஆண்​டுக்கு ரூ.2.50 லட்​சம் கோடி மீத​மாகும் என்​றும் பிரதமர் தெரி​வித்​துள்​ளார். ஆனால், கடந்த 8 ஆண்​டு​களில் 4 வகை​யான உயர்ந்த வரி​களை விதித்து ரூ.55 லட்​சம் கோடியை மக்​களிட​மிருந்து வசூலித்​துள்​ளனர். பாஜக ஆட்​சி​யில்​தான் வரி அதி​க​மாக்​கப்​பட்​டது. மக்​களை 8 ஆண்​டு​களாக ஏமாற்​றி​யுள்​ளனர்.

கரூரில் காங்​கிரஸ் தலை​வரை, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​தது நாகரி​க​மான செயல் அல்ல. எங்​கள் தலை​வர் ராகுல், அரசி​யல் ரீதி​யாக​வும், அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டும் ஸ்டா​லினின் சிறந்த நண்​பர். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை.

அதற்​காக நாங்​கள் கூட்​டணி மாறி​விடு​வோம்; வேறு கூட்​ட​ணி​யில் சேர்ந்து விடு​வோம் என்று கூறு​வது வதந்​தி​யே. திமுக​வினர் எங்​கள் நண்​பர்​கள். அவர்​களிடம் நாங்​கள் உரிமை​யைக் கேட்​கிறோம். காங்​கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அரசி​யல் பேச வேண்​டுமே தவிர, தனி நபர் விமர்​சனம் செய்​யக் கூடாது. மாநில காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகையை பற்றி தனி நபர் விமர்​சனம் செய்​கிறார். எங்​களை, திமுக​வின் விசு​வாசி என்று பழனி​சாமி கூறு​வது தவறான​தாகும்.

தவெக​வால் திமுக கூட்​ட​ணிக்கு நிச்​ச​யம் பாதிப்பு ஏற்​ப​டாது. எங்​களுக்கு 45 சதவீதத்​துக்​கும் கூடு​தலான வாக்​கு​கள் உள்​ளன. தவெக வாக்கு சதவீதம் இது​வரை நிருபிக்​கப்​பட​வில்​லை. அதி​முககூட 20-லிருந்து 23 சதவீதத்​துக்கு மேல் இம்​முறை வாக்​கு​களைப் பெற முடி​யாது. அவர்​களு​டன் கூட்டு சேருபவர்​கள் பலவீன​மான நிலை​யில் உள்​ளனர். எனவே, வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here