மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்.8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வது கட்டாயம்

0
30

தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்​பாட்டை குறைக்க இணை​ய​வழி மனு தாக்​கல் முறை ஓராண்​டுக்கு முன்பு அறி​முகம் செய்யப்பட்டது.

இம்​முறை​யில் வழக்கு தொடர்​பான மனுக்​கள் மற்​றும் ஆவணங்​களை ஸ்கேன் செய்​து, நீதி​மன்ற வலைதள முகவரி​யில் பதிவேற்றம் செய்து அனுப்​பவேண்​டும். இந்த முறையை பின்​பற்​று​வ​தில் சில சிரமங்​கள் எழுந்​த​தால், உயர் நீதி​மன்​றத்​தில் இணை​ய​வழி மனு தாக்​கல் நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள அனைத்து மாவட்ட நீதி​மன்​றங்​களில் உள்ள அனைத்து வழக்​கு​களை​யும் அக். 8 முதல் இணை​ய​வழி​யில் தாக்​கல் செய்​வதை கட்​டாய​மாக்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு, புதுச்​சேரி​யில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிப​தி, மாவட்ட நீதிபதி ஆகியோ​ருக்கு உயர் நீதி​மன்​றத் தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் புள்​ளி​யியல் துறை பதி​வாளர் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அதில், மாவட்ட நீதி​மன்​றங்​களில் அக்​டோபர் 8 முதல் அனைத்து வழக்​கு​களுக்​கும் இணை​ய​வழி மனு தாக்​கல் கட்​டாயப்​படுத்​தப்​படு​கிறது.

இந்த வசதி தொடர்​பாக, வழக்​கறிஞர்​கள் மற்​றும் அனைத்து வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களுக்கு தெரியப்​படுத்த வேண்​டும். அலுவலகங்​களுக்கு நேரில் வந்து மனு தாக்​கல் செய்​யு​மாறு கட்​டாயப்​படுத்​தக் கூடாது. இணை​ய​வழி மனு தாக்​கல் முறையை பின்​பற்​று​வ​தில் ஏதாவது சிரமம் இருந்​தால், மாவட்​டங்​களில் உள்ள இ-சேவை மையங்​களின் உதவியைப் பெறலாம்.

இணை​ய​வழி​யில் தாக்​கல் செய்​யப்​படும் மனுக்​களை தாமதம் இல்​லாமல் ஆய்வு செய்ய அனைத்து நீதித்​துறை அதி​காரி​கள் மற்றும் பணி​யாளர்​களுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மூத்த வழக்​கறிஞர் ஒரு​வர் கூறிய​தாவது: இணை​ய​வழி மனு தாக்​கல் முறை​யில், மனுக்​களை ஸ்கேன் செய்து பதிவேற்​றம் செய்ய வேண்​டும். பின்​னர், மனுக்களின் நகலை நேரடி​யாக​வும் வழங்க வேண்​டும். தற்​போது, பொருளா​தா​ரம் தொடர்​பான வழக்​கு​கள், சமரசத் தீர்வு வழக்குகள், ஜாமீன் மனுக்​கள் இணை​ய​வழி​யில் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன.

கடந்த ஓராண்​டாக இணை​ய​வழி மனு தாக்​கல் செய்ய பயிற்சி பெறு​மாறு வழக்​கறிஞர்​கள் அறி​வுறுத்​தப்​பட்​டனர். இதனால், இம்​முறையை பின்​பற்​று​வ​தில் அதிக சிரமம் ஏற்​ப​டாது. செல்​போன் வழி​யாகவே மனுக்​களை ஸ்கேன் செய்​யும் வசதி​யுள்​ளது. இவற்றை பயன்​படுத்தி மனுக்​களை இணை​ய​வழி​யில் விரை​வில் தாக்​கல்​ செய்​ய​முடி​யும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here