பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

0
267

நயன்தாரா நடிப்பில், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘த ராஜா சாப்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நயன்தாரா பங்குபெறும் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபாஸும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘யோகி’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here