ரூ.200 கோடியில் உலக அழகி தேவையா? – பிஆர்எஸ் கட்சி கண்டனம்

0
171

ஹைதராபாத்தில் ரூ.200 கோடியில் உலக அழகி போட்டி நடத்த எதிர்கட்சியான பிஆர்எஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு, பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், கே.சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி ராமாராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ.71 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். ஆனால், இது போன்ற சமயத்தில் ரூ.200 கோடி செலவு செய்து ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி தேவையா? இதேபோல் ஃபார்முலா ரேஸ் நடத்த ரூ. 46 கோடி ரேவந்த் ரெட்டி அரசு செலவிட்டுள்ளது. ஆனால் அடிப்படை தேவைகளான அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியான தேதியில் ஊதியம் அளிக்க கூட ரேவந்த் ரெட்டி அரசால் இயலவில்லை.

மக்களை நம்ப வைக்கவே இது போன்ற ஆடம்பர செலவுகளை ரேவந்த் ரெட்டி அரசு செய்து வருகிறது என கே. டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here