Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

இரணியல்: ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

0

இரணியல் அருகே உள்ள காரங்காடு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரோஸ்லெட் (54). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக பேயன்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அவர் சென்ற பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் பஸ் நுள்ளிவிளை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்த ரோஸ்லெட் தவறி வெளியே விழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சகபாணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version