ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன் நேற்று தனது வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும், அவரது பக்கத்து வீடான கோபால் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. எதிர் வீட்டில் வசிப்பவரின் வீட்டிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
