கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் உத்தரவின்படியே பணிபுரிந்ததாகக் கூறும் தொழிலாளர்கள், தங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், அவுட்சோர்சிங் முறையை கைவிடவும் வலியுறுத்தினர். இதனால் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டது.
