இரணியல்: கார் மோதி ஒருவர் உயிரிழப்பு; டிரைவருக்கு 2 வருடம் சிறை

0
279

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை அடுத்த சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் காசி தங்கம் (70). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு முன்புள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் மோதி காசி தங்கம் உயிரிழந்தார். இதுசம்பந்தமாக மணவாளக்குறிச்சி போலீசார் கார் டிரைவர் பூதப்பாண்டியை அடுத்த முத்து (28) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு இராணியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி அமருதீன் தீர்ப்பு வழங்கினார். அதில் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, மூதாட்டி மரணத்திற்குக் காரணமான கார் டிரைவர் முத்துவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here