இரணியில் அருகே நுள்ளிவிளை ஊராட்சி 16 வது வார்டு மேல்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
அதை போன்று தரமான சாலை வசதிகள் செய்து தரவில்லை, தெருவிளக்குகள் முறையாக அமைக்கவும் இல்லை எனவும், இந்த நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (அக்.,24) கண்டன் விளையில் அமைந்துள்ள நுள்ளி விளை ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் மோகன்தாஸ் தொடக்கி வைத்தார். தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் முன்னிலை வகித்தார். கிளை உறுப்பினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.