Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

இரணியல்: அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

0

இரணியல் அருகே சுங்கான்கடை  பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இதில் இரண்டாவது மகன் ஸ்பர்ஜன் (24) என்பவர் உடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி ஸ்பர்ஜன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த முருகேசன் தென்னைக்கதூ வைக்கும் விஷ மாத்திரை தின்றுள்ளார்.  
அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் சென்று பார்த்து,   அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தார். பின்னர் அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின்  பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version