Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: நாய் கடித்து இன்ஜினியர் உயிரிழப்பு

இரணியல்: நாய் கடித்து இன்ஜினியர் உயிரிழப்பு

0

இரணியல் அருகே  பரசேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மூத்த மகன் மனீஷ் (28). பி. இ பட்டதாரி. இவர் கடந்த சுமார் 40 நாட்களுக்கு முன்பு பைக்கில் நுள்ளிவிளை ஊராட்சி மணக்கரைக்கு சென்ற போது அவரை ஒரு தெரு நாய் கடித்துள்ளது. தெரு நாய் கடிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு வந்தார்.  

 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனீஷ் தூங்க சென்றார். நேற்று  காலை  மனீஷ் கட்டிலில் இருந்து விழுந்து தரையில் கவிழ்ந்த நிலையில்  கிடந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள்  மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில்  இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version