இரணியல்: பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் இறப்பு

0
212

இரணியல் அருகே உள்ள பரிசேரி பஸ் நிறுத்தத்தில் நேற்று முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.3) இரவு அவர் உயிரிழந்தார். 

இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது முதியவரின் உடல் மருத்துவக் கல்லூரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறந்தவர் யார்? அவரது மரணத்திற்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here