Home சினிமா செய்திகள் இரணியல்: தண்டவாளத்தில் வாலிபர் சடலம்.. கொலையா?

இரணியல்: தண்டவாளத்தில் வாலிபர் சடலம்.. கொலையா?

0

இரணியல் அருகில் நுள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் நேற்று(நவம்பர் 21) மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பைக் உள்ளிட்டவை ரயில்வே மேம்பாலம் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இறந்தவர் யார் என தெரியவில்லை. தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் லுங்கியும், அரைக்கைச் சட்டையும் அணிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலில் வெட்டுக் காயம் இருந்தது. 

இதையடுத்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version