இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி மஞ்சுஷா (33). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இன்று (29-ம் தேதி) காலை பள்ளிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மஞ்சுஷா பைக்கில் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்படு படுகாயம் அடைந்த மஞ்சுஷாவை அவர் உறவினர்கள் களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தில் பைக்கில் வந்த குசவன்குடியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இரணியல் போலீசார் வினோத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.