Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: பைக் மோதி அங்கன்வாடி ஆசிரியை படுகாயம்

இரணியல்: பைக் மோதி அங்கன்வாடி ஆசிரியை படுகாயம்

0

இரணியல் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதாகுமாரி (46). அங்கன்வாடி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று (மே.8) மதியம் ஸ்கூட்டரில் காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக சுஜிதாகுமாரியின் ஸ்கூட்டரை மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் அஜாகிரதையாகவும் வேகமாக பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோணம் பகுதை சேர்ந்த அருள் (30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version