கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சசி (59). இவர் மணக்கரையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். நேற்று (ஜனவரி 21) மாலை வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வில்லுக்குறிப் பாலம் அருகில் செல்லும்போது பின்னால் வேகமாக வந்த கனிமவளக் லாரி பைக்கில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சசியை குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சசி உயிரிழந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனர். இதுபோன்று சுங்கான் கடைப் பகுதியைச் சேர்ந்தவர் துரை (58). இவர் மாவு மில்லில் மெஷின் ஆபரேட்டராக உள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த துரையை குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்தும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














