இரானி கோப்பை கிரிக்கெட்: மும்பை முன்னிலை

0
292

லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 537 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்திருந்தது. நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அபிமன்யு ஈஸ்வான் 191 ரன்களில் ஆட்ட மிழந்து இரட்டை சத வாய்ப்பை இழந்தார். துருவ் ஜூரெல் 93, மானவ் சுத்தர் 6, சரண்ஷ் ஜெயின் 9, யஷ் தயாள் 6 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி மொத்தமாக 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிருத்வி ஷா 76, ஆயுஷ் மாட்ரே 15, ஹர்திக் தாமோர் 7. அஜிங்கிய ரஹானே 9, ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்கள் எடுத்தனர். சர்பிராஸ் கான் 9, தனுஷ் கோட்டியான் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here