Home மாநில செய்திகள் 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்

10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்

0

சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் போட்​டியைக் காண வரும் ரசிகர்​களின் வசதிக்​காக, போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில்​களில் இலவச​மாக பயணிக்​கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்​டி​யில் சென்னை சூப்​பர் கிங்ஸ் மற்​றும் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதவுள்​ளன.

இதையொட்​டி, ரசிகர்​களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்​கும் நோக்​கில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சிஎஸ்கே உடன் இணைந்து சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.

அதன்​படி, மே 10 அன்று நடை​பெற உள்ள போட்​டிக்​கான ஸ்பான்​சர் டிக்​கெட் (நுழைவுச்​சீட்​டு) வைத்​திருக்​கும் ரசிகர்​கள், சென்​னை​யில் செயல்​பாட்​டில் உள்ள எந்​த வொரு மெட்ரோ ரயில் நிலை​யத்​திலிருந்​தும் மைதானத்​துக்கு அரு​கிலுள்ள அரசினர் தோட்​டம் மெட்ரோ நிலை​யத்​துக்கு எவ்​வித கட்​ட​ண​மும் இன்றி பயணிக்​கலாம்.

ரசிகர்​கள் தங்​களின் நுழைவுச்​சீட்​டில் உள்ள பிரத்​தி​யேக க்யூ-ஆர் குறி​யீட்டை மெட்ரோ நிலை​யங்​களில் உள்ள தானி​யங்கி நுழைவு இயந்​திரத்​தில் ஸ்கேன் செய்து பயணத்​தைத் தொடங்​கலாம்.

இந்​தச் சலுகை​யானது ஒரு​முறை சென்று வரு​வதற்​கான இரண்டு நுழைவு மற்​றும் இரண்டு வெளி​யேறு​தல்​களை உள்​ளடக்​கியது. மேலும், போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில் சேவை​கள் ஞாயிற்​றுக்​கிழமை கால அட்​ட​வணை​யின்​படி இயக்​கப்​படும்.

ரசிகர்​கள் போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த வசதி​யைப் பயன்​படுத்​திக்​கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version