ஐபிஎல் 2026 அலசல்: கோப்பை தாகத்தை தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ் அணி?

0
29

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. கடைசியாக விளையாடிய 5 சீசன்களில் அந்த அணி 3 முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது.

5 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத வறட்சிக்கு இதற்கு இம்முறை அந்த அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஒரு வலுவான இந்திய வீரர்களின் கூட்டணியைக் கொண்டுள்ளது.

பலம்: ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். இவர்களுடன் குயிண்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆகியோரது அதிரடியும் பலம் சேர்க்கக்கூடும்.

ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் கூட்டணி உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சு இணையாகக் கருதப்படுகிறது. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் மிட்செல் சாண்ட்னர், வில் ஜேக்ஸ், கார்பின் போஷ், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோரின் வருகை அணியின் பின் வரிசை பேட்டிங்கை பலப்படுத்தக்கூடும்.

பலவீனங்கள்: சுழற்பந்துவீச்சில் மிட்செல் சாண்ட்னரைத் தவிர அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை. அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அடிக்கடி காயமடையும் வாய்ப்புள்ளதால், அவர்களைச் சரியாகக் கையாளுவது சவாலாக இருக்கும்.

அணி விவரம்: பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், குயிண்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, ராபின் மின்ஸ், டானிஷ் மலேவார்.

ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, அதர்வா அன்கோலேகர், கார்பின் போஷ், ராஜ் பாவா, வில் ஜேக்ஸ், மயங்க் ராவத், நமன் திர், மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர்.

பந்துவீச்சாளர்கள்: டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வனி குமார், தீபக் சாஹர், கசன்ஃபர், மயங்க் மார்க்கண்டே, மொகமது இஷார், ரகு சர்மா.

சிறந்த செயல் திறன்

2013, 2015, 2017, 2019, 2020 – சாம்பியன் பட்டம்

2025 – (தகுதி சுற்று 2-ல் தோல்வி)

மோதல்கள்

மார்ச் 29 | இரவு 7.30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | மும்பை

ஏப்ரல் 4 | பிற்பகல் 3.30

டெல்லி கேப்பிடல்ஸ் | டெல்லி

ஏப்ரல் 7 | இரவு 7.30

ராஜஸ்தான் ராயல்ஸ் | குவாஹாட்டி

ஏப்ரல் 12 | இரவு 7.30

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | மும்பை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here