Home விளையாட்டு செய்திகள் ஐபிஎல் 2026 அலசல்: திட்டம் போட்டு களமிறங்கும் கில்லின் குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2026 அலசல்: திட்டம் போட்டு களமிறங்கும் கில்லின் குஜராத் டைட்டன்ஸ்

0

குஜராத் டைட்டன்ஸ் பலமே அணி​யின் தெளி​வான கட்டமைப்​பு​தான். மற்ற அணி​களைப் போல ஏலத்​தில் பெரிய பெயர்​களைத் தேடி ஓடா​மல், ஏற்​கெனவே உள்ள தங்​களின் வலு​வான அடித்​தளத்தை நம்பி அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். ஏலத்​துக்கு முன்பே 20 வீரர்​களைத் தக்​க​வைத்​தது என்​பது அவர்​களின் திட்​ட​மிடலுக்கு சிறந்த சான்​று. மீத​முள்ள ஐந்து இடங்​களை நிரப்​புவதற்கு மட்டுமே அவர்​கள் ஏலத்​தைப் பயன்​படுத்​தினர்.

இதில், ஜேசன் ஹோல்​டர் அனுபவம் வாய்ந்த ஆல்​-ரவுண்டராக அணி​யின் சமநிலையை அதி​கரிக்​கிறார். டாம் பான்​டன் அதிரடி பேட்​டிங் மற்​றும் விக்​கெட் கீப்​பிங் ஆப்​ஷ​னாக இணை​கிறார். இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான லூக் வுட் பவர்​பிளே​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய​வர். இளம் இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர்​களான அசோக் சர்​மா, பிரித்​வி​ராஜ் யர்ரா ஆகியோர் பெஞ்ச் பலத்​திற்​காக சேர்த்​துள்​ளனர்.

பயிற்​சி​யாளர் ஆஷிஷ் நெஹ்​ரா, கேப்​டன் ஷுப்​மன் கில் கூட்​ட​ணி, தேவை​யில்​லாத ஆர்ப்​பாட்​டங்​களை விட தங்களுக்​குத் தெரிந்த வெற்​றிகர​மான ஃபார்​முலா​வையே இந்த சீசனிலும் பின்​பற்​றக்​கூடும். வலு​வான டாப் ஆர்​டர், நிதானம் காட்​டக்​கூடிய நடு​வரிசை, இறு​திக்​கட்ட ஓவர்களில் வேகம் காட்​டக்​கூடிய பேட்​ஸ்​மேன்​கள், வேகப்​பந்து வீச்சு தாக்​குதல் கூட்​ட​ணி, நடு ஓவர்​களில் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தக்​கூடிய சுழற்​பந்து வீச்​சாளர்​கள் என அனைத்து அடிப்​படைகளை​யும் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி பூர்த்தி செய்​துள்​ளது.

எல்​லாற்​றுக்​கும் மேலாக கடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை​யில் தொடரில் ஷுப்​மன் கில் நீக்​கப்​பட்டு இருந்தார். நவீன கால டி20 ஆட்​டங்​களுக்கு தகுந்தபடியான ஸ்டிரைக் இல்​லாத​தா​லும், பவர்​பிளே​வில் ரன் குவிக்க சிரமப்​பட்​ட​தா​லும் இந்​திய அணி​யில் தனது இடத்தை ஷுப்​மன்​ கில்​ இழந்​திருந்​​தார்​. இந்​த பலவீனத்தை சரிசெய்​து டி 20-ல்​ தனது முத்​தியை பதிக்ககில்​ முயற்​சிக்​கக்​கூடும்​.

பலம்: 2025-ம் ஆண்டு சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் சுதர்சன் (759 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (650 ரன்கள்) டாப் ஆர்டர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா (கடந்த சீசனில் 25 விக்கெட்டுகள்) ஆகியோரை உள்ளடக்கிய வேகக்கூட்டணி பவர்-பிளே மற்றும் டெத் ஓவர்களில் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடும். டெவாட்டியா, ஷாருக்கான், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.

பலவீனம்: ரஷீத் கானின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சமீபகாலமாக டி 20 போட்டிகளில் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதாக கணித்து விளையாடி வருகின்றனர். கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் 10 விக்கெட்களுக்கும் குறைவாக கைப்பற்றிருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அவரது மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அவர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வருவது அவசியம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் கடந்த முறை 538 ரன்கள் எடுத்திருந்தாலும், சமீபத்திய டி20 போட்டிகளில் அவர், ரன்கள் குவிக்க சிரமப்பட்டு வருகிறார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் அவர், 8 ஆட்டங்களில் 87 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். வெளிநாட்டு வீரர்களில் ஜேசன் ஹோல்டர், கிளென் பிலிப்ஸ், ரஷித் கான், காகிசோ ரபாடா, ஜாஸ் பட்லர், லூக் வுட், டாம் பேன்டன் ஆகியோரில் இருந்து 4 பேரை விளையாடும் லெவனில் தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கக்கூடும்.

செயல் திறன்:

  • 2022: சாம்பியன்
  • 2023: 2-வது இடம் (சிஎஸ்கேவிடம் தோல்வி)
  • 2024: 8-வது இடம்
  • 2025: 4-வது இடம் – (எலிமினேட்டரில் தோல்வி)

அணி விவரம்:

பேட்ஸ்மேன்கள்: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான். பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபாடா, லூக் வுட், இஷாந்த் சர்மா, மானவ் சுதர், குர்னூர் சிங் பிரார், அசோக் சர்மா, பிரித்விராஜ் யர்ரா.

ஆல்ரவுண்டர்கள்: வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ராகுல் டெவாட்டியா, நிஷாந்த் சிந்து, முகமது அர்ஷத் கான், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டர்.

மோதல்கள்

மார்ச் 31 | பஞ்சாப் கிங்ஸ் | முலான்பூர் | இரவு 7.30

ஏப்ரல் 4 | ராஜஸ்தான் ராயல்ஸ் | அகமதாபாத் | இரவு 7.30

ஏப்ரல் 8 | டெல்லி கேப்பிடல்ஸ் | டெல்லி | இரவு 7.30

ஏப்ரல் 12 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | லக்னோ | பிற்பகல் 3.30

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version