சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி – டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐஓபி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் – அக்னி பிரண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐசிஎஃப் 25-23, 25-20, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. லீக்கில் இன்று ஓய்வு நாளாகும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐஓபி – ஐசிஎஃப் அணிளும், 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா – அக்னி பிரண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.














