போதையில் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

0
210

குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மகன் வினோத் (26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத் ரப்பர் மரங்களை  பாரம் ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம்(செப்.30) இரவு பூலங்கோடு என்ற குளத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து செல்லும் ஓடை அருகில் வினோத் மதுபோதையில் நின்றுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இந்த நிலையில் நேற்று ( 1 -ம் தேதி) காலையில் அந்த ஓடையில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் வினோத் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  

இதையடுத்து வினோத்தின் உடலை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மது போதையில் இருந்த வினோத் ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here