சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி: 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது

0
282

இண்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்சிங் ஷோ என்று அறியப்படும் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் 12-வது பதிப்பு இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (இஇபிசி) தலைவர் அருண் கரோடியா கூறியதாவது: சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நவம்பர் 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில் பங்களி்ப்பு செய்யும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. அதேபோல், மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது இடத்திலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் முதல் நிலையிலும் தமிழ்நாடு உள்ளது. இதனை உணர்ந்தே நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் டாடா ஸ்டீல், ஜாகுவர் லேண்ட் ரோவர், ஆர்சிலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல், கோஸ்டல் கத்தார் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 நாடுகளைச் சேர்ந்த 300 பங்கேற்பாளர்களும், 10,000-க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் மையங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறும். இவ்வாறு அருண் கரோடியா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here