சர்​வதேச சிவில் ஏவியேஷன் அமைப்​பின் 80-வது ஆண்டு சர்வதேச சிவில் விமான போக்கு​வரத்து தின விழா: சென்னை விமான நிலை​யத்​தில் நாளை நடக்​கிறது

0
175

இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் (ஐஏஏஏ) சார்பில் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் 80-வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தின விழா கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் நாளை (டிச.7) நடைபெறுகிறது.

சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (International Civil Aviation Organization- ICAO) 50 ஆண்டிலிருந்து அமைப்பின் தொடக்க நாளான டிசம்பர் 7-ம் தேதி சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக (International Civil Aviation Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் (Institute of Aeronautics Astronautics and Aviation – IAAA) ஆண்டுதோறும் கொண்டாடுகிறது.

அதேநேரம், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பானது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்பு தொடங்கியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருப்பொருளை வெளியிடுகிறது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் 75-வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினத்தை சென்னையில் ஐஏஏஏ கொண்டாடியது. இந்த விழாவுக்கு மீடியா பார்ட்னராக `இந்து தமிழ் திசை’ நாளிதழ் இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் 80-வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் விழாவை இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் ஐஏஏஏ கொண்டாட இருக்கிறது. இந்த விழாவுக்கு பார்ட்னர்களாக இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும்தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என் நிறுவனம்’ உள்ளன.

விழாவில் சிறந்த ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அது தொடர்பாக ஒரு பிரிவும் தொடங்கப்படவுள்ளது. இந்த தகவலை ஐஏஏஏ கவுரவ செக்ரட்டரி ஜெனரல் பேராசிரியர் சி.எஸ்.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here