டெல்லி ஜாமியா நகரில் கடந்த திங்கட்கிழமை ஷாபாஸ் கான் என்பவரை ஒரு வழக்கில் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் தலைமையிலான கும்பல் தங்களை தாக்கியதாகவும் இதில் ஷாபாஸ் கான் தங்கள் பிடியில் இருந்து தப்பி விட்டதாகவும் டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அமானுல்லா கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமானுல்லா கான் முன்ஜாமீன் கோரியிருந்தார். அவரது மனு சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமானுல்லா கானை பிப்வரி 24 வரை கைது செய்ய போலீஸாருக்கு நீதிபதி தடை விதித்தார். அழைக்கும்போது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமானுல்லா கானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகள் இருந்தால் அதனை வழக்கு ஆவணங்களுடன் வரும் 24-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.














