Home மாநில செய்திகள் நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் ஒருங்கிணைந்த தணிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் ஒருங்கிணைந்த தணிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

0

 தமிழகம் முழு​வதும் நச்சுக்கழிவு மேலாண்மை நிலை​யங்​களில் தீயணைப்பு துறை​யுடன் இணைந்து ஒருங்​கிணைந்த தணிக்கை நடத்த வேண்​டும் என்று மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யத்​துக்கு பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் அமைந்​துள்ள நச்சுக்கழிவு மேலாண்மை நிலை​யத்​தில், ரசாயனக் கழி​வுக் குவியல் ஒன்​றில் தீப்​பிடித்​த​தாக​வும், அதனால் நச்​சுப் புகை​யானது கிராமங்​களைச் சூழ்ந்து பொது​மக்​களுக்கு பாதிப்பு ஏற்​பட்​ட​தாக​வும் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் நாளிதழ் ஒன்​றில் செய்தி வெளி​யானது.

அதன் அடிப்​படை​யில் தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தது. இது தொடர்​பாக மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம் தாக்​கல் செய்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நச்சுக்கழிவு மேலாண்மை நிறு​வனத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிற்​பகல் 1 மணி அளவில், சேமிப்​புக் கிடங்​கில் தீப்​பிடித்​தது.

உடனே உலர் வேதி பொடிகளைத் தூவிய​தா​லும், தானி​யங்கி நீர் தெளிப்பு அமைப்​பும் உடனடி​யாக செயல்​பட்​ட​தா​லும், தீயணைப்​புத் துறை உடனடி​யாக செயல்​பட்​ட​தா​லும், இரவு 8.30 மணிக்​குள் தீ கட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டது.

பரிந்துரைகள்

தீப்​பற்​றியது தொடர்​பாக விளக்​கம் கேட்​டு, அந்த நிறு​வனத்​துக்கு நோட்​டீஸும் வழங்​கப்​பட்​டது. இது​போன்ற தீ விபத்​துகளைத் தடுக்க தீ, வெடி, நச்​சுத் தீர்வு நிறு​வனம் (FET) தீ விபத்து ஏற்​பட்ட பகு​தி​யில் ஆய்வு செய்து பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கியது. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்​கின் தீர்ப்​பை, அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்​ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​கவா ஆகியோர் கடந்த வாரம் வழங்​கினர். அதில் கூறி​யிருப்​ப​தாவது:

விதி மீறினால் நடவடிக்கை

நச்​சுக்​கழிவு மேலாண்மை நிறு​வனம், எஃப்​இடி நிறு​வனம் வழங்​கிய பரிந்​துரைகளை பின்​பற்ற வேண்​டும். பிளாஸ்​டிக் தொடர்​பான பொருட்​களை பாது​காப்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட சிமென்ட் தொழிற்​சாலைகளுக்கு அனுப்ப வேண்​டும்.

மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம், தீயணைப்​புத் துறை​யுடன் இணைந்​து, தமிழகம் முழு​வதும் உள்ள அபாயகர கழி​வு​களைக் கையாளும் நிறு​வனங்​களில் தீ விபத்து தடுப்பு தொடர்​பாக ஒருங்​கிணைந்த தணிக்​கையை நடத்த வேண்​டும்.

வி​தி​களை பின்​பற்​றாத நிறு​வனங்​கள் மீது மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம் நடவடிக்கை எடுக்​கலாம்​. இவ்​வாறு தீர்ப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version