மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று கூறியிருப்பதாவது: பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கு ரூ.8,170.30 கோடி செலவாகும்.
நபார்டு வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக சுமார் ரூ.170 கோடி செலவாகும். நிலுவைத் தொகையாக மட்டும் சுமார் ரூ.510 கோடி வழங்கப்படும். ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட்டதன் மூலம் நிலுவைத் தொகை ரூ.50.82 கோடி ஒரே தவணையில் செலுத்தப்படும்.
ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 10 சதவீதம் அதிகரிக்கும். இது கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலாகும்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.2,696.82 கோடி செலவாகும். இதில் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க ரூ.2,485.02 கோடி செலுத்தப்படும். இவ்வாறு நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
