இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் அட்னான் மவுலானா, இன்தா கஹ்யா சாரி ஜமீல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 19-21, என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி யு குயிடமும், கிரண் ஜார்ஜ் 12-21, 10-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜினிடமும் தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரக்சிதா 17-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டொமோகா மியாசாகியிடமும், தன்யா ஹேமநாத் 14-21, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானானிடமும் தோல்வி அடைந்தனர்.














