மகளிருக்கான புரோ ஹாக்கி லீக்கில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இநதியா – ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அமேலி வோர்ட்மேன் (3-வது நிமிடம்), சோபியா ஸ்வாபே (18 மற்றும் 47-வது நிமிடம்), ஜோகான் ஹாச்சன்பெர்க் (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி தனது ஆட்டத்தில் இன்று ஜெர்மனியுடன் மீண்டும் மோதுகிறது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
Latest article
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல...
மணவாளகுறிச்சி: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார்....
நித்திரவிளை: ஜப்தி செய்த வீட்டை உடைத்த தம்பதி
நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில்...








