அரை இறுதி சுற்றில் நுழைந்தது இந்திய அணி: உலகக் கோப்பை ஸ்கு​வாஷ் தொடர்

0
24

எஸ்​டிஏடி உலகக் கோப்பை ஸ்கு​வாஷ் தொடர் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. 12 நாடு​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரில் நேற்று கால் இறுதி ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​திய அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதி​யது. இந்த ஆட்​டத்​தில் இந்​தியா 3-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது.

மகளிர் பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்​பா, டீகன் ரஸ்​ஸலுடன் மோதி​னார். அதில் ஜோஷ்னா 7-4, 7-4, 7-2 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். 2-வது ஆட்​டத்​தில் ஆடவர் பிரி​வில் இந்​தி​யா​வின் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற செட் கணக்​கில் டெவால்ட் வான் நிகெர்க்கை தோற்​கடித்​தார்.

தொடர்ந்து நடை​பெற்ற மகளிர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் 7-3, 7-3, 7-4 என்ற செட் கணக்​கில் ஹேலி வார்டை வீழ்த்​தி​னார்.

இன்று நடை​பெறும் அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி நடப்பு சாம்​பிய​னான எகிப்​துடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. எகிப்து அணி கால் இறுதி ஆட்​டத்​தில் 3-0 என்ற கணக்​கில் வெற்றி ஆஸ்​திரேலி​யாவை தோற்​கடித்​தது. இன்று நடை​பெறும் மற்​றொரு அரை இறு​தி​யில் ஹாங் காங் – ஜப்​பான் அணி​கள் மோதுகின்​றன.

ஹாங் காங் அணி கால் இறுதி சுற்​றில் 3-0 என்ற கணக்​கில் சுவிட்​சர்​லாந்தை வென்​றது. ஜப்​பான் அணி, மலேசி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்தை 2-2 என்ற கணக்​கில் சமன் செய்​திருந்​தது. எனினும் லீக் சுற்​றில் அதிக செட்​களை வென்​றத​ன் அடிப்​படை​யில் ஜப்​பான் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here