எதிரி நாட்டு செயற்கைக்கோளை உளவு பார்க்கலாம்: இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை

0
9

எ​திரி நாட்டு செயற்​கைக்​கோள்​களை இனி இந்​தியா உளவு பார்க்க முடி​யும் என்ற நிலையை அடைந்​துள்​ளது. விண்​வெளி​யில் 50-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​ கோள்​களை ஏவி இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிலை​யம் (இஸ்​ரோ) நிர்​வகித்து வரு​கிறது. இந்த செயற்​கைக்​ கோள்​களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்​கும் மேல் என்று தெரிய​வந்​துள்​ளது.

இந்நிலையில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறு​வனம், ஒரு செயற்கைக்​ கோளில் இருந்து மற்​றொரு பொருளைப் புகைப்​படம் எடுக்​கும் தொழில்​நுட்​பத்தை (நான்​-எர்த் இமேஜிங்) செய்து காட்டியுள்​ளது.

கடந்த 3ம் தேதி நடை​பெற்ற இந்​தச் சோதனை​யில், அசிஸ்டா நிறு​வனத்​தின் 80 கிலோ எடை கொண்ட ஏஎப்​ஆர் செயற்​கைக்​கோள், விண்​வெளி​யில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் நிறு​வி​யுள்ள சர்வ​தேச விண்​வெளி நிலை​யத்தை (ஐஎஸ்எஸ்) மிகத் துல்லியமாகப் புகைப்​படம் எடுத்​துள்​ளது.

இது விண்​வெளி​யில் உள்ள மற்ற நாடு​களின் செயற்​கைக்​கோள்களைக் கண்​காணிக்​கும் அல்​லது ‘உளவு பார்க்​கும்’ (இன்-ஆர்பிட் ஸ்னூப்​பிங் – In-Orbit Snooping) இந்​தி​யா​வின் திறனை ஒரு புதிய உயரத்​துக்​குக் கொண்டு சென்​றுள்​ளது. இந்​தச் சோதனை விண்​வெளி​யில் மிகச் சவாலான சூழலில் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. சுமார் 300 கிலோ மீட்​டர் மற்​றும் 245 கிலோ மீட்​டர் தொலைவுகளில் இருந்து அதிவேக​மாகச் சென்று கொண்டிருக்கும் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை ஏஎப்​ஆர் செயற்​கைக்​கோள் பின்​ தொடர்ந்து துல்​லியமாக புகைப்படங்களை எடுத்​துள்​ளது.

இந்​தத் தொழில்​நுட்​பம் விண்​வெளி​யில் மற்ற நாடு​கள் அனுப்​பும் செயற்​கைக்​கோள்​கள் எங்​கெங்கு செல்​கின்​றன, உளவு பார்க்கின்றனவா என்​ப​தைக் கண்​காணிக்க உதவும். இந்​தத் தொழில்​நுட்​பத்தை மேலும் மேம்​படுத்​து​வதன் மூலம், எதிரி நாடு​கள் ஏவும் பாலிஸ்​டிக் ஏவு​கணை​களை உளவு பார்த்து ஆரம்​பக் கட்டத்திலேயே கண்​டறியலாம். இஸ்ரோ ஏற்கெ​னவே இத்​தகைய சோதனைகளைச் செய்​திருந்​தா​லும், ஒரு தனி​யார் நிறு​வனம் இந்த நிலையை எட்​டி​யிருப்​பது இந்​தி​யா​வின் விண்​வெளித் துறை வணி​கமய​மாவதை உறு​திப்​படுத்​துகிறது.

இதுகுறித்து அசிஸ்டா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறும்​போது, “முன்​னேறிய புகைப்​படங்​கள் எடுக்​கும் திறனை​யும், ரிமோட்​-சென்​சிங் தீர்​வு​களை​யும் ஏஎப்​ஆர் செயற்​கைக் ​கோள் வாடிக்​கை​யாளர்​களுக்கு அளித்து வரு​கிறது. தற்​போது நான்​-எர்த்​ இமேஜிங்​ புகைப்​படத்​தை எடுத்​து சாதனை படைத்​துள்​ளது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here