1,638 கடன் அட்டைகளுடன் கின்​னஸ் சாதனை படைத்த இந்தியர்

0
13

கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன.

எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி வரு​கிறார். எந்த ஒரு கடன் அட்​டை​யிலும் அவருக்கு கடன் இல்​லை. அதிக கடன் அட்​டைகளை வைத்​திருப்​ப​தற்​காக மணிஷ், கடந்த 2021, ஏப்​ரல் 30-ம் தேதி கின்​னஸ் உலக சாதனை புத்​தகத்​தில் இடம்​பிடித்​தார்.

இதுகுறித்து மணிஷ் கூறும்​போது, “கடன் அட்​டைகள் இல்​லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது என நினைக்​கிறேன். எனக்கு கடன் அட்​டைகள் மிக​வும் பிடிக்​கும். இலவச பயணம், ரயில்வே லவுஞ்ச், விமான நிலைய லவுஞ்ச், உணவு, ஸ்பா, ஓட்​டல் வவுச்​சர்​கள், இலவச உள்​நாட்டு விமான டிக்​கெட்​கள், இலவச திரைப்பட டிக்​கெட்​கள், இலவச எரிபொருள் போன்​றவற்றை மைல்​கற்​களை எட்​டி​யும், வெகுமதி புள்​ளி​கள் மற்​றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்​படுத்​தி​யும் அனுபவிக்​கிறேன்.

கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 பண மதிப்​பிழப்பு நடவடிக்​கை​யின்​போது புதிய ரூபாய் நோட்​டுக்​காக ஏடிஎம்​களில் வரிசை​யில் நின்று நான் சிரமப்​பட​வில்​லை. கடன் அட்​டைகளை பயன்​படுத்தி செல​விட்​டேன்” என்​றார். செலவு செய்​வதற்​கான கருவி​களைக் கூட புத்​தி​சாலித்​தன​மாக பயன்​படுத்​தி​னால், அவற்றை பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான கரு​வி​யாக மாற்ற முடி​யும் என்​பதை மணிஷின்​ கதை நமக்​கு உணர்த்​துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here