இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்

0
11

ஜன​நாயகத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அங்கு உள்ள இஐஏ பல்​கலைக்​கழகத்​தில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில், ராகுல் காந்தி பேசும்​போது, “இந்​தியா உலகத்​துக்கு ஏராள​மான விஷ​யங்​களை செய்ய முடி​யும் என்ற நம்​பிக்கை எனக்கு உள்​ளது. ஆனால், இந்​திய அமைப்​பில் சில பிழைகள் உள்​ளன. அதனை எதிர்​கொள்​வ​தில் இந்​தியா சில சவால்​களை எதிர்​கொள்ள வேண்​டும். குறிப்​பாக, இந்​தி​யா​வில் பல மதங்​கள், மரபு​கள் மற்​றும் மொழிகள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. ஆனால் தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பல திசைகளி​லிருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது” என்​றார்.

இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஷெஷாத் பூனாவல்லா எக்ஸ் பக்​கத்​தில், “ராகுல் காந்தி மீண்​டும் இந்​தி​யா​வுக்கு எதி​ரான பிரச்​சா​ரகர் போல பேசி உள்​ளார். வெளி​நாட்​டுக்​குச் சென்று இந்​திய ஜனநாயகத்தை விமர்​சிக்​கிறார். சில நேரங்​களில் அமெரிக்கா​வும் இங்​கிலாந்​தும் நம் நாட்டு உள் விவ​காரங்​களில் தலை​யிட வேண்​டும் என்​று கோரு​கிறார்​” என பதி​விட்​டுள்​ளார்​.

கங்கனா ரனாவத் கண்டனம்: ​பாஜக எம்​.பி. கங்​கனா ரனாவத் கூறியதாவது: இந்​திய ஜனநாயகம் மீதான ராகுல் காந்​தி​யின் கருத்து அரசுக்கு மட்​டுமல்ல நாட்டு மக்​களை​யும் அவமானப்​படுத்​து​வது போன்​ற​தாகும். அவர் இகழ்ச்​சிக்கு உரிய​வர். அவர் எங்கு சென்​றாலும் நாட்டை விமர்​சித்து அவமானப்​படுத்த முயற்​சிக்​கிறார் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். அவர் இந்த நாட்​டின் மக்​கள் நேர்​மையற்​றவர்​கள் என்று கூறுகிறார்.

அப்​படி​யா​னால், அவர் இந்​தி​யர்​களை அறி​வில்​லாதவர்​கள் என்​பது போல சித்​தரிக்க முயற்​சிக்​கிறார். அவர் அப்​படி சொல்​வ​தால் அவரை இகழ்ச்​சிக்கு உரிய​வர் என்று குறிப்​பிடு​கிறேன். அவர் எப்​போதும் நாட்​டுக்கு அவமானத்தை தரு​கிறார். மேலும் நாடும் அவரை அவம​திக்​கிறது” என்​றார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளான நேற்று உள்​நாட்டு உடைகள் குறித்து கங்​கனா ரனாவத் கூறும்​போது, “நான் காதி புட​வை, காதி ஜாக்​கெட் அணிந்​திருக்​கிறேன். நம் நாட்டு ஜவுளி மற்​றும் ஆயத்த ஆடைகள் உலகம் முழு​வதும் பிரபலம் அடைந்​துள்​ளன. எதிர்​பா​ராத​வித​மாக நாம் பல பொருட்​களுக்​காக பிற நாடு​களை சார்ந்து இருக்​கிறோம். இதை தவிர்த்து சுய​சார்பை எட்ட வேண்​டிய நேரம் வந்​து​விட்​டது. இதன்​படி, நாம் காதி உடைகளை வாங்​கு​வோம்.

கடந்த வாரம் மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பேசிய பிரதமர் மோடி, காந்தி பிறந்த நாளில் காதி பொருட்​களை அதிக அளவில் வாங்க வேண்​டும் என வேண்​டு​கோள் விடுத்​தார். அவருடைய வார்த்​தைக்​கு மரி​யாதை கொடுப்​போம்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here