இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்டில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம்

0
217

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்கிறது. அதேவேளையில் இருதரப்பு டி 20 தொடரை வங்கதேச அணிக்கு முதன்முறையாக இந்திய அணி விளையாட உள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரு ஆட்டங்கள் மற்றும் டி 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்கள் மிர்பூரிலும் 3-வது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டி 20 ஆட்டம் சட்டோகிராமிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி டாக்கா புறப்பட்டுச் செல்கிறது.

ஆகஸ்ட் 17-ல் முதல் ஒருநாள் போட்டியும் 20-ம் தேதி 2-வது ஒருநாள் போட்டியும், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 26, 29 மற்றும் 31-ம் தேதிகளில் டி 20 தொடரிடன் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here