கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று (ஜன. 13) இந்தியன் கிளினிக் டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஆசாரிப்பள்ளம் அடுத்த கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜான் ஸ்டீபன் (54) என்பவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உண்மை விபரத்தை கண்டறிந்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.














