தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்சர்ஸ் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்றல் இந்தியாவின் கன்ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜாய் தேவி, ஜப்பானின் யூரா கனேமருவை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தார். 50 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அம்பேகர் மீட்டி 4-1 என்ற கணக்கில் ஜப்பானின் அகிரா யுகுபோவை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.
மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சந்திரிகா புஜராரி, ஸ்பெயினின் ஆண்ட்ரியா புல்கா கார்சியாவை தோற்கடித்தார். 57 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தின் சியோபன் ஹேலியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா 5 பதக்கங்களை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது.














