எஸ்-400 ஏவுகணை செயல்படும் வீடியோ: இந்திய விமானப்படை வெளியிட்டது

0
15

அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை செயல்​படும் வீடியோ காட்​சிகளை இந்​திய விமானப்​படை நேற்று வெளி​யிட்​டது.

ராஜஸ்​தானில் நேற்று நடை​பெற்ற ‘வா​யுசக்​தி’ போர் பயிற்​சி​யின் முன்​னோட்​ட​மாக இந்த வீடியோ காட்சி விமானப்​படை சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. எதிரி நாட்டு விமானங்​களை ரேடார் மூலம் கண்​டறிந்​து, எஸ்​-400 ஏவு​கணை​யைச் செலுத்தி அழிக்​கும் காட்​சிகள் இந்த வீடியோ​வில் இடம்​பெற்​றுள்​ளன. எதிரி​கள் எட்​டாத தூரத்​தில் இருக்​கலாம், ஆனால் எங்​கள் பார்​வை​யில் இருந்து தப்ப முடி​யாது என்ற சக்​தி​வாய்ந்த வாசகத்​துடன் இந்த வீடியோ பகிரப்​பட்​டுள்​ளது.

மேலும் நீண்ட தூரத்​தில் இருக்​கும் இலக்​கை​யும் துல்​லிய​மாகத் தாக்​கும் எஸ்​-400 ஏவு​கணை என்ற தகவலுடன் வீடியோ வெளி​யாகி​யுள்​ளது.இந்த வீடியோ​வில், வானில் இருக்​கும் இலக்கை முதலில் எஸ்​-400 ரேடார் அமைப்பு கண்​டறிகிறது. பின்​னர் எஸ்​-400 ஏவு​கணை செலுத்​தப்​பட்​டதும், அது துல்​லிய​மாக இலக்​கைத் தாக்கி அழிக்​கிறது. இது​வரை பதிவு செய்​யப்​பட்ட மிக நீண்ட தூர இடைமறிப்பு அழிப்பு ஏவு​கணை இது என்​று தெரி​விக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு இந்​திய விமானப் ​படை, ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலை நடத்​தி​ய​போது இந்த எஸ்​-400 வகை ஏவு​கணை​கள்​தான் பயன்​படுத்​தப்​பட்டன என்​றும் விமானப்​படை கூறியுள்ளது.

எஸ்​-400 ஏவு​கணை அமைப்​பு​களை இந்​திய ராணுவம் சுதர்சன சக்ரா என்று அழைத்து வரு​கிறது. இதை ரஷ்​யா​வின் அல்​மாஸ்​-அன்டே நிறு​வனம் தயாரித்​துள்​ளது. 2018-ல் ஐந்து எஸ்​-400 வகை தாக்​குதல் ஏவு​கணை அமைப்​பு​களை ரஷ்​யா​விட​மிருந்து வாங்​கியது. 2021-ல் முதல் அவை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

சுமார் 600 கிலோமீட்​டர் தூர​முள்ள இலக்​கு​களை​யும் இந்த ஏவு​கணை​கள் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here