Home விளையாட்டு செய்திகள் யு-19 டெஸ்டில் இந்தியா வெற்றி

யு-19 டெஸ்டில் இந்தியா வெற்றி

0

இந்​தியா யு-19 மற்றும் ஆஸ்​திரேலியா யு-19 கிரிக்​கெட் அணி​கள் இடையி​லான அதி​காரப்​பூர்​வ​மற்ற 2-வது டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா யு-19 அணி 174 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா யு-19 அணி 315 ரன்​கள் குவித்து அனைத்து விக்​கெட்​களையும் இழந்​தது. 141 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலியா யு-19 அணி 43.5 ஓவர்​களில் 151 ரன்​களுக்கு சுருண்​டது.

இந்​தியா யு-19 அணி​யின் தரப்​பில் தன்​மய் பலோடா 41 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 8 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​னார்.

இதையடுத்து 11 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா யு-19 அணி 0.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி வெற்றி பெற்​றது. இந்த வெற்​றி​யின் மூலம் டெஸ்ட் தொடரை இந்​தியா யு-19 அணி 2-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது. ராஜ்கோட்​டில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​தியா யு-19 அணி இன்​னிங்ஸ் மற்​றும் 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version