IND vs NZ டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு – பும்ரா துணை கேப்டன்

0
257

மும்பை: நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

வரும் 16-ம் தேதி முதல் இந்த தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி 24-ம் தேதி அன்று புனேவில் நடைபெறுகிறது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்று நியூஸிலாந்து இழந்தது. இந்த நிலையில் இரண்டு அணிகளும் இதில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியுடன் பயணிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here