Home தேசிய செய்திகள் எல் நினோ தாக்கம் எதிரொலி: இந்திய அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு

எல் நினோ தாக்கம் எதிரொலி: இந்திய அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு

0

தென்மேற்குப் பருவமழை நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், நாட்டின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விட் குறைவாகும்.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ காரணியின் வலுவான தாக்கத்தால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீண்ட வறண்ட வானிலையும் தீவிர மழைப் பற்றாக்குறையும் நிலவியது. இதன் காரணமாகக் நாட்டின் பல பகுதிகளில் வறட்சிச் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள 92 அணைகளின் நீர் இருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தென்னிந்திய அணைகளில் கடந்த ஆண்டு 87.25 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, தற்போது 50 சதவீதமாக சரிந்துள்ளது. இப்பகுதியில் பருவமழை வழக்கத்தை விட 23 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

அதேபோன்று வட மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு 62 சதவீதமாகவும், கிழக்கு மாநிலங்களில் 73 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நீர் இருப்பு கணிசமாக குறைந்துள்ளதால், வரவிருக்கும் காலங்களில் குடிநீர் விநியோகம், பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version