சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

0
327

 சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர்.

பின்னர் அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால் விசாரணையை நீதிபதி வரும் நவ.7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here