பிரபல இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கு சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகளை ஒன்றிணைத்து உணர்ச்சி ததும்பத் தரும் இசை சிம்பொனி.
அதன் தொடக்கமாக 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்?’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார். பின்னர், ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை இயற்றிய இளையராஜா, அதை லண்டனில் நடத்தினார்.
பின்னர் சென்னையிலும் அந்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிலையில் 2-வது சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “புதிய ஸ்டூடியோவுக்கு வந்து பிப்.3-ம் தேதியுடன், 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. என்னுடைய 2-வது சிம்பொனியை பெரும்பாலும் எழுதி முடித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.



