பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மேம்பாடு தொடர்பாக ஐஐடி அறக்கட்டளை-ராணுவம் ஒப்பந்தம்

0
16

பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள் மேம்​பாடு தொடர்​பாக, சென்னை ஐஐடி அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களை மேம்​படுத்​து​வது, ராணுவத் தொழில்​நுட்​பங்​களில் வெளி​நாடு​களை சார்ந்​திருப்​பதை குறைப்​பது தொடர்​பாக, சென்னை ஐஐடி பிர​வர்​தக் டெக்​னாலஜீஸ் அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவத்​தின் எலெக்ட்​ரானிக்ஸ் அண்ட் மெக்​கானிக்​கல் இன்​ஜினீயரிங் பிரிவு நேற்று புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் தலை​மைச் செயல் அலு​வலர் எம்​.ஜெ.ஷங்​கர் ராமன், இந்​திய ராணுவத்​தின் இஎம்இ பிரிவு கமாண்​டிங் அதி​காரி மேஜர் ஜெனரல் லலித் கபூர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்​திட்டனர். இந்த ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, ஆவடி​யில் ஆராய்ச்​சி, கண்​டு​பிடிப்பு ஒருங்​கிணைப்பு மையம் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

ஒப்​பந்​தம் குறித்து மேஜர் ஜெனரல் லலித் கபூர் கூறும்​போது, “ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யுடன் இணைந்து செயல்​படு​வதன் மூலம் ராணுவத்​தின் இஎம்இ பிரிவு, ராணுவ நடவடிக்​கைகளை​யும், ஆயுதங்​களின் தரத்​தை​யும் மேம்​படுத்​து​வதை குறிக்​கோளாகக் கொண்​டுள்​ளது.

இதன்​மூலம், பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களுக்கு வெளி​நாடு​களைச் சார்ந்​துள்​ளதை கணிச​மாக குறைக்க முடி​யும்” என்​றார்.

ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் வியூக ஆலோ​சகரும், தென்​பி​ராந்​திய ராணுவத்​தின் முன்​னாள் கமாண்​டிங் அதி​காரி​யு​மான லெப்​டினென்ட் ஜெனரல் கரன் சிங் பிரார் கூறும்​போது, “இந்த கூட்டு முயற்சி மூலம் கல்வி நிறு​வனம் மற்​றும் ராணுவத்​தின் திறமை​களை ஒருங்கே பயன்​படுத்​த முடியும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here