தென் ஆப்பிரிக்க அணி வீரர் சுப்ராயன் பந்துவீச ஐசிசி அனுமதி

0
47

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வீரர் பிரேனலன் சுப்​ராயன் போட்​டிகளில் பந்​து​வீச சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணிக்​காக போட்​டிகளில் பங்​கேற்று வரு​கிறார் சுப்​ராயன். இந்​நிலை​யில் கடந்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் அவர் பங்​கேற்​றார்.

அப்​போது அவர் பந்​து​வீசுவ​தில் சந்​தேகம் இருப்​ப​தாக புகார் எழுப்​பப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஆஸ்​திரேலி​யா​வின் பிரிஸ்​பேனி
லுள்ள நேஷனல் கிரிக்​கெட் சென்​டரில், அவரது பந்​து​வீச்சு பரிசோதனை செய்​யப்​பட்​டது. சுயபரிசோதனை பந்​து​வீச்சு மதிப்​பீடு என்ற பெயரில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது. இதன்​படி அவர் பந்​து​வீசும்​போது முழங்கை 15 டிகிரி அளவுக்​குள் இருப்​ப​தாக​வும், அது ஐசிசி-​யின் பந்​து​வீச்சு விதி​முறைக்கு உட்​பட்டு இருப்​ப​தாக​வும் அறிக்கை தரப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவர் போட்​டிகளில் பங்​கேற்​கலாம் என ஐசிசி அனு​ம​தியை வழங்​கி​யுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here