ஒட்டுமொத்த பெண் சக்தியை திரட்டி போராடுவேன்: சி.வி.சண்முகத்துக்கு பிரேமலதா எச்சரிக்கை

0
20

 “பெண்களை இழிவு படுத்​து​வதை தயவு செய்து இத்​தோடு நிறுத்​திக் கொள்ள வேண்​டும். இல்​லை​யென்​றால் ஒட்​டுமொத்த பெண் சக்​தி​யைத் திரட்டி போராட்​டத்தை முன்​னெடுப்​பேன்” என, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

சட்​டம் – ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர்.

விழுப்​புரத்​தில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பேசிய அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், நடிகை ஒரு​வரின் பெயரைக் குறிப்​பிட்டு அநாகரி​க​மாகப் பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில்,சென்​னை​யில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்​டாடிய தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா, பின்னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் பெண்களுக்கு பாது​காப்பு இல்லை என்று சொல்லி நடந்த ஆர்ப்​பாட்​டத்தில் ஒருவர் நடிகைக்கு எதிராக அநாகரிகமாக பேசியது கண்டித்தக்கது.

எந்​தப் பெண்ணாக இருந்​தா​லும் எந்த சாதி, மதமாக இருந்​தா​லும் ஒரு பெண்ணை தரக்​குறை​வாக பேசுபவர்​கள் யாராக இருந்​தா​லும் நிச்​சய​மாக கண்​டிக்​கப்பட வேண்​டிய​வர்​கள். அவர்​கள் குடும்​பத்​தி​லும் பெண்​கள் இருக்​கிறார்​கள்.

அவர்​களிடம் அந்​தக் கேள்​வியை கேட்​டால் அவர்​கள் ஏற்​றுக் கொள்​வார்​களா? பெண்களை இழிவு படுத்​து​வதை தயவு செய்து இத்​தோடு நிறுத்​திக் கொள்ள வேண்​டும்.

இல்​லை​யென்​றால் கட்​சிகள், சாதி​கள்,மதங்​களுக்கு அப்​பாற்​பட்டு ஒட்​டுமொத்த பெண் சக்​தி​களை ஒன்​றாக திரட்டி மிகப்​பெரிய ஆர்ப்​பாட்​டத்தை பெண்கள் சார்​பாக நான் முன்​னெடுப்​பேன். இதில் எந்த மாற்​றுக் கருத்​தும் இல்​லை.

ஒவ்​வொரு பெண்ணும் இன்று குடும்​பத்​தின் ஆணிவேர். பெண்களை மதிக்​கும் வகை​யில் தான் நாம், தாய் நாடு, குலதெய்​வம் என்று சொல்​கிறோம். பெண்களை இழி​வுப்​படுத்​து​வது யா​ராக இருந்​தா​லும் மிக​வும் கண்​டிக்​கக்​ கூடியது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here