விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன்: எஸ்.ஏ.சி

0
289

மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார்.
அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏசி, “மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி பேசுவார் என நினைக்கவே இல்லை. அரண்டு போய்விட்டேன்.

என் மகனின் வேகத்தை அன்று தான் பார்த்தேன். சினிமாவில் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால், மேடையில் அப்படி பேசியதை பார்த்து பிரமித்துவிட்டேன். முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்து தான் அப்படி விஜய்யை பேச வைத்தது” என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.

விஜய்யின் பேச்சுப் பின்னணி குறித்து இப்போது வரை பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், விஜய் மாநாட்டுக்கு எப்படி இந்தளவுக்கு கூட்டம் கூடியது, எப்படி கூட்டி வந்தார்கள் என்பது குறித்து உளவுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here